நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அபாய நிலையில் வேலை செய்யும் கைத்தறி நெசவாளர்கள்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள கூட்டுறவு கைத்தறி அபிவிருத்தி திட்ட வளாகம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. புதுவை மாநிலத்தைச் சேர்ந்த நெசவாளர்களின் நலனுக்காக

News image
Updated On :3 பிப்ரவரி 2014, 2:04 pm

சுஜித்குமார்

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள கூட்டுறவு கைத்தறி அபிவிருத்தி திட்ட வளாகம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. புதுவை மாநிலத்தைச் சேர்ந்த நெசவாளர்களின் நலனுக்காக புதுவை கூட்டுறவு கைத்தறி அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை முத்தையமுதலி வீதியில் திட்ட வளாகம் உள்ளது. நெசவாளர்களிடம் நூலை அளித்து

பின்னர் துணியாகப் பெற்று பான்பேப் விற்பனை செய்து வருகிறது.கடந்த 1980-ஆம் ஆண்டு இப்பகுதியில் தறிக்கூடங்கள் அமைகக்ப்பட்டன. இங்கு 5 தறிக்கூடங்கள் இயங்கி வந்தன. இதற்கிடையே கடந்த 2008-ஆம் ஆண்டு வீசிய தானே புயலின் போது சில தறிக்கூடங்கள் சேதமடைந்தன. அவை இன்று வரை சீரமைக்கப்படவில்லை.

இதற்கிடையே மிகவும் அபாய நிலையில் உளள 3 தறிக்கூடங்களில் 180 பெண்கள் உள்பட 280 பேர் தறிகளில் வேலை செய்து வருகின்றனர். தறிக்கூடங்களில் மொத்தம் 300-க்கு மேற்பட்ட தறிகள் உள்ளன.பெரும்பாலும் நலிந்த நிலையில் உள்ளவர்களே இங்கு உறுப்பினர்களாக உள்ளனர்.

பெட்ஷீட், சேலை, லுங்கி, துண்டு போன்றவை இங்கு நெய்யப்படுகின்றன. இவர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களுக்கு ஏற்றவாறு கூலித் தொகை வழங்கப்படுகிறது.ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1500 முதல் ரூ.3 ஆயிரம் வரை தொடர்ந்து வேலை வழங்கினால் கிடைக்கும்.

ஆனால் இவர்களுக்கு ஒரு மாதம் வேலை தந்தால் 3 மாதங்கள் பணி கிடைக்காத நிலை உள்ளது. பெண் நெசவாளர்கள் அதிகம் பணிபுரியும் இத்தறிக்கூடங்கள் மிகவும் அவல நிலையில் காணப்படுகின்றன.திங்கள்கிழமை ஒரு கூடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பெண்கள் காயமடைந்தனர். இதனால் பெண்கள் அங்கு வேலை செய்யவே அச்சப்படுகின்றனர்.

மீதமுள்ள தறிக்கூடங்கள் எப்போது இடிந்து விழும் என தெரியாத நிலை காணப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ எம்-எல் மாநில செயலர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:பல மாதங்களாக இத்தறிக்கூடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டும் பலனில்லை. கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் ஏழ்மை நிலையில்உள்ளனர். தொடர்ந்து வேலையும் கிடைக்கவில்லை.280 கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.2 லட்சம் தான் செலவாகிறது.ஆனால் பான்பேப் திட்டத்தில் உள்ள 44 ஊழியர்களுக்கு மாதம் ரூ.9.5 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது.கைத்தறி நெசவு முற்றிலும் அழிவதற்குள் முதல்வர் ரங்கசாமி தலையிட்டு இவர்களுக்கு தொடர்ந்து வேலை தர வேண்டும். மேலும் முத்தியால்பேட்டை பான்பேப் தறிக்கூடங்களை சரி செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.