மாநில கூடைப்பந்துப் போட்டி: திருச்சி அணிக்கு சுழற்கோப்பை
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டியில் திருச்சி காவல்துறை முதலிடம் பெற்று சுழற்கோப்பையை தட்டி சென்றது.


திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளியில் கூடைப்பந்துப் போட்டியில் திருச்சி காவல்துறை முதலிடம் பெற்று சுழற்கோப்பையை தட்டி சென்றது. கல்லிடைக்குறிச்சி திலக் ஹைட்ரா கூடைபந்தாட்டக் கழகம் சார்பில் கனடியன் டிராபி 2014 கோப்பைக்கான மின்னொளியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் 3 தினங்கள் நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதியில் 20 அணிகள் கலந்து கொண்டன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி காவல்துறை அணி, திருநெல்வேலி பி.எஸ்.என் அணி,ன. தூத்துக்குடி மேவரிக்ஸ் அணி, தூத்துக்குடி பாரதியார் அணிகள் விளையாடின. இதில் திருச்சி காவல்துறை அணி முதலிடமும், தூத்துக்குடி மேவரிக்ஸ் அணி 2 வது இடமும், திருநெல்வேலி பி.எஸ்.என். அணி 3 ஆவது இடமும், தூத்துக்குடி பாரதியார் அணி 4 ஆவது இடமும் பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு அமைப்பின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பா. மணிமாறன் சுழற்கோப்பை மற்றும் பரிசுத் தொகையினை வழங்கி பாராட்டினார்.
முதலிடம் பெற்ற அணிக்கு சுழற்கோப்பையும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசும், 2 ஆவது இடம் பெற்ற அணிக்கு சுழற்கோப்பை, ரொக்கப் பரிசு ரூ. 7 ஆயிரமும், 3 ஆவது இடம்பெற்ற அணிக்கு ரூ. 5 ஆயிரம், 4 ஆவது இடம் பெற்ற அணிக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்பட்டது.
விழாவில் இந்திய செஞ்சிலுவைச் சங்க அம்பாசமுத்திரம் வட்டச் செயலர் வி. சலீம், வள்ளியூர் தொழிலதிபர் வி.எல். தவசிமுத்து, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ப. முத்துக்கிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். அமைப்பின் துணைத் தலைவர் ஜாபர்உசேன் வரவேற்றார். செயலர் டேவிட்ஜோ நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...