ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லையில் போலீசை கண்டித்து  பாஜக திடீர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாக புகார் தெரிவித்து காவல்துறை ஆய்வாளரை கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அக்கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2014, 7:57 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி மீது பொய் வழக்கு தொடரப்பட்டதாக புகார் தெரிவித்து காவல்துறை ஆய்வாளரை கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அக்கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தச்சநல்லூர் மண்டல பொதுச்செயலர் பி. செந்தில்குமார் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்ததற்கு ஆட்சேபம் தெரிவித்தும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளரின் நடவடிக்கையை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க திரண்ட அக்கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மு. பாலசுப்பிரமணியன், எஸ்.சி. அணி மாவட்டத் தலைவர் முருகதாஸ், மாவட்ட துணைத் தலைவர் அருள்ராஜ், அமைப்பு பொதுச்செயலர் டி.வி. சுரேஷ், வழக்குரைஞர் அணி மாவட்டத் தலைவர் முத்துபாண்டி, தச்சை மண்டலத் தலைவர் எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.