முதல்வரை விமர்சித்த விஜயகாந்த்-க்கு நெல்லையில் ஜெ. பேரவைக் கூட்டம் கண்டனம்
பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை விமர்சனம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-


பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை விமர்சனம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-யை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஜெ. பேரவைத் தலைவர் ஆர்.பி. ஆதித்தன் தலைமை வகித்தார். மாவட்ட ஜெ. பேரவைச் செயலர் சுதா கே. பரமசிவன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன் எம்.பி., விஜிலா சத்யானந்த் எம்.பி., மாவட்ட அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம்,
மாவட்ட இணைச் செயலர் வசந்திமுருகேசன், மாவட்ட ஜெ. பேரவைப் பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட விவசாய அணி செயலர் ஆவின்ரமேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலர் சி.ப. முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் மகபூப்ஜான், பாளை மண்டலக்குழுத் தலைவர் எம்.சி. ராஜன், பகுதி பொறுப்பாளர்கள் சக்திகுமார், சீனிமுகம்மது, தொகுதிச் செயலர்கள் பால்கண்ணன், சரவணன், பகுதிச் செயலர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி பிப். 22 ம் தேதி கண் பரிசோதனை முகாம், 23 ம் தேதி இரவு 12 மணிக்கு சந்திப்பு த.மு. ரோட்டில் வைத்து 66 கிலோ கேக் வெட்டி முதல்வர் பிறந்த தினத்தை கொண்டாடுவது, பிப். 24 ம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவது, வரும் மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி, தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது,
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை விமர்சனம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-யை கண்டிப்பது, தாமிரவருணி குடிநீர் திட்டத்துக்கு ரூ. 234 கோடி நிதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, முத்துராமலிங்கத்தேவருக்கு தங்ககீரிடம் வழங்கி சிறப்பித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...