மக்களவைத் தேர்தல்: நெல்லையில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக திருநெல்வேலியில் ஆட்சியர் மு. கருணாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக திருநெல்வேலியில் ஆட்சியர் மு. கருணாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரவைத் தொகுதிகளில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய 6 தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலும், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 4 தொகுதிகள் தென்காசி மக்களவைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது.
இம்மாவட்டத்தில் 23 லட்சத்து 13 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர். விரைவில் மக்களவைத் தேர்தல் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இம்மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் மு. கருணாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமாமகேஷ்வரி, திருநெல்வேலி கோட்டாட்சியர் சீனிவாசன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பால்துரை, 11 தாலுதா தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...