தமிழ்நாட்டில் மாற்று அணியாக பாஜக கூட்டணி அமையும்: வைகோ
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கூட்டணிகளுக்கு மாற்றாக பாஜக கூட்டணி அமையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை


நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கூட்டணிகளுக்கு மாற்றாக பாஜக கூட்டணி அமையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது: சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெற்ற பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி பேசிய பேச்சு எழுச்சி மிகு உரையாக இருந்தது. கூட்டாட்சி, தேசிய நதிநீர் இணைப்பு குறித்து பேசியுள்ளார்.
இலங்கை தமிழர்கள், மீனவர்கள், நதிநீர் பிரச்சனைகளில் முன்னாள் பாஜக பிரதமர் வாஜ்பாய் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாஜக ஆட்சிக்கு வந்தால் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என சென்னையில் மோடியை சனிக்கிழமை சந்தித்த போது வலியுறுத்தினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.நேர்மையும் நாணயமும் மிக்க மோடி தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கம் உள்ளவர் என புகழ்ந்தார். குஜராத் மாநிலத்தில் இவரது ஆட்சியில் அனைவரும் மத ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். நரேந்திர மோடி பிரதமரானால் சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக இருப்பார்.
வருகின்ற தேர்தலின் பாஜக 250 முதல் 270 இடங்களில் தனி பெரும் கட்சியாக வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி தூக்கி எறியப்படும். காங்கிரஸ் ஆட்சியில் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்தின்படி நாடு முன்னேற்றம் அடையும் என நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தமிழ்நாட்டில் வாக்காளரிடம் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என கட்சிகள் நினைக்கின்றனர்.தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக பாஜக கூட்டணி அமையும். இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...