ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ரூ. 1500 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்

ஊதிய உயர்வு, வங்கிகள் சீர்த்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.

News image
Updated On :11 பிப்ரவரி 2014, 9:38 am

ஷேக் அப்துல்காதர்

ஊதிய உயர்வு, வங்கிகள் சீர்த்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இதனால் பண பரிவர்த்தனை, ஏடிஎம் சேவை முடங்கியது.

வங்கிகளை பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும். வங்கிகள் சீர்த்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 15 மாதமாகிவிட்டதால், 10 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக 250 வங்கிகளும் இயங்கவில்லை.  இந்த போராட்டத்தினால் காசோலை பண பரிவர்த்தனை, பணம் செலுத்துதல் போன்ற வங்கி நடவடிக்கைகள் முடங்கியதால் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சிறுதொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

ஏடிஎம் மையங்களில் திங்கள்கிழமை பிற்பகலில் இருந்த பணம் தட்டுபாடு ஏற்பட்டது.சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை தினங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் வைக்காததால் ஏடிஎம் சேவை திங்கள்கிழமை மாலையில் இருந்து முற்றிலுமாக முடங்கியது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 ஆவது நாளாக நீடித்த போராட்டத்தினால் சுமார் ரூ. 1500 கோடிக்கான பண பரிவர்த்தனை முடக்கம் ஏற்பட்டதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம்: கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் ஆர். ரெங்கன், எட்வின் (தேசிய வங்கி ஊழியர் சங்கம்), முருகன் (அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம்), முத்தையா (வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு), கணேசன் (அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்) உள்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.