பாபநாசம் அணை நீர்மட்டம் 65 அடியாக குறைந்தது
பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. புதன்கிழமை பாசனத் தேவைக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து


பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. புதன்கிழமை பாசனத் தேவைக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதலாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகள் நிரம்பவில்லை. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. அணைகளின் நீர் இருப்பை கொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இவ்விரு மாவட்டங்களில் பாசனம் பெறும் 86,107 ஏக்கர் நிலங்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடி திறக்கப்பட்டு வந்தது.
அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து புதன்கிழமை 65.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 495 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர்மட்டம் குறைந்து வருவதை அடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை புதன்கிழமை 673 கனஅடி குறைக்கப்பட்டுள்ளது. பாசனத் தேவையை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அணையில் இருந்து கூடுதலாக 500 கனஅடி திறக்கப்பட்டு்ள்ளது.
பிசான பருவ சாகுபடி அறுவடைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது. பெருங்கால் பாசனத்திற்கு 30 கனஅடி திறந்து விடப்படுகிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.22 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 41.10 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 32.25 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 42.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.76 அடியாகவும் இருந்தது. கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து தலா விநாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கருப்பாநதி அணையில் இருந்து 5 கனஅடியும், அடவிநயினார் அணையில் இருந்து 20 கனஅடியும் திறக்கப் பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...