ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வறண்டு வரும் அணைகள்: நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாடு அபாயம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வறண்டு வருவதால் குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை ராமநதி அணை, கடனாநதி அணைகளின்

News image
Updated On :15 பிப்ரவரி 2014, 6:13 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வறண்டு வருவதால் குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை ராமநதி அணை, கடனாநதி அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வறண்டு வருவதால் கடையம் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 28.25 அடியாக குறைந்து காணப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 10.88 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 15 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.

ராமநதி அணைப் பாசனத்தில் 4,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு்ள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் இப்பகுதியில் அறுவடை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பை கொண்டு பிசான சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டதால் சாகுபடி பாதிப்பின்றி தப்பியது. அணை வறண்ட காரணத்தாலும் அணையில் 25 அடிக்கு மேல் சகதி இருப்பதாலும் ஓரிரு நாளில் அணை மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே கடையம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

கடனாநதி அணையின் நீர்மட்டம் 39.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 9.61 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 9,000 ஏக்கர் நிலங்களுக்கு இன்னும் 15 தினங்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அணையின் நீர்மட்டம் 25 அடியாக குறைந்தால் அணை மூடப்படும். அணையில் தண்ணீர் திறக்காத நிலையில் ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை இருப்பதாக ஊராட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 61.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 170.02 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்கு 605 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 71.19 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 78.53 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு 8 கனஅடிதான் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 530 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனம் செய்யப்பட்டு்ள்ள 86,107 ஏக்கரில்அறுவடை செய்ய இன்னும் 3 வாரங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த அணைகளின் நீர்மட்டம் 50 அடியாக குறையும் பட்சத்தில் வரும் மாதம் இறுதி வரை இவ்விரு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என கேள்வி எழுந்துள்ளது.

வடக்குபச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் வறண்டு மூடப்பட்டன. ராமநதி அணை ஓரிரு நாளில் மூடப்படும். குறைந்த நீர்மட்டம் உள்ள குண்டாறு, கருப்பாநதி அணைகளில் தற்போதைய நிலவரப்படி சகதிதான் உள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் மட்டும் 60 அடிக்கு அதிகமாக நீர் இருப்பு உள்ளது.

குடிநீர் தட்டுபாடு அபாயம்: இம்மாவட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு குறைந்து வருவதால் பரவலாக குடிநீர் தட்டுபாடு எழும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கினால்தான் அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும். அதுவரை குடிநீர் பிரச்னையை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்தால் குடிநீர் பிரச்னையை சமாளிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.