கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வாய்மையே வெல்லும் என்பதை நாங்கள் உணர்கிறோம்: பேரறிவாளன் தந்தை பேட்டி

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை கைதியாக இருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து  இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பேரறிவாளன் தந்தை தா.ஞானசேகரன் குயில்தாசன் 73 கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2014, 7:22 am

ரவி

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை கைதியாக இருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்து  இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பேரறிவாளன் தந்தை தா.ஞானசேகரன் குயில்தாசன் 73 கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தன் மகள் வீட்டில் வீட்டில் வசிக்கும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த தீர்ப்பு மூலம்  வாய்மையே வெல்லும் என்பதை நாங்கள் உணர்கிறோம் எனினும் இது காலம் கடந்த பலன். எங்களுக்கு நீதிமன்றத்தின் மீதும்  சட்டத்தின் மீதும்  நம்பிக்கை இருந்தது. பெரியார் கொள்கையில் பற்று கொண்ட நாங்கள் விடுதலிப்புலிகளின் ஆதரவாளவர் ஆக இருந்ததால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரணை செய்ய வேண்டும் என கூறி அழைத்து சென்று  பேரரளிவான் பேட்டரி வைத்திருந்ததாக பொய் வழக்கில் சிக்க வைத்தனர்.

தற்போது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி என்றாலும் விரையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். பேரறிவாளன் இளமை காலம் சிறையில் சென்று விட்டது. எனினும் அவருக்கு திருமணம் செய்து வைக்க நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் விடுதலைக்காக தமிழர்கள் போராடுவர்கள் என்று தெரிவித்தார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடங்கள் குற்றவாளியாகவே சித்தரித்து காட்டுகிறது. இதனால் பழி சுமத்தப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இந்த போக்கை ஊடங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.