தியாகி தில்லையடி வள்ளியம்மையின் ஆன்மா இந்த மண்ணில் இன்னும் உயிர்பித்திருப்பதை உணர முடிகிறது என வள்ளியம்மையின் சகோதரர் வழி சந்ததியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தியாகி வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு நிறைவு நாள்(16_02_ 2014) நிகழ்வு நாகை மாவட்டம் தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்று நோய்வாய் பட்டு 16 வயதிலேயே (பிப்.22,1914) உயிர் நீத்தவர் தில்லையாடி வள்ளியம்மை.ஒரு பெண்ணாக,தமிழராக,இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்த வள்ளியம்மை குறித்து இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக சரித்திரத்தில் வள்ளியம்மாவின் பெயரும் நீங்கா இடம் பெற்றிருக்கும்"என்று காந்தி குறிப்பிட்டிருந்தார்.
தில்லையாடி ஊராட்சி மற்றும் பொது மக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் எம்.நடராஜன் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் தில்லையாடி வள்ளியம்மையின் தம்பி பக்கிரி முதலியாரின் கொள்ளுப்பேரன் தென்னாப்பிரிக்காவில் வசித்து வரும் பிரெக முனுசாமி(57),அவரது மனைவி ரதி முனுசாமி(50),மகள்கள் பிரனிதா முனுசாமி(30),சரிஷா முனுசாமி(23) மற்றும் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தென்னாப்பிரிக்க தமிழர் வழி சமூகத்தை சேர்ந்த மாதவ கிருஷ்ண முதலியார்,அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக காலந்து கொண்டனர்.
வள்ளியம்மையின் சந்ததியினரை இந்நிகழ்வில் பங்கேற்க செய்வதற்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்ட தருமபுரி கே.பாலசுந்தரம் அவர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வள்ளியம்மையின் சந்ததியினர் பிரெக முனுசாமி,பிரனிதா முனுசாமி ஆகியோர்,
இந்த மண்ணில் வள்ளியம்மையின் ஆன்மா இன்னும் உயிர்ப்பித்திருப்பதை காண முடிகிறது.இங்கு உழைக்கின்ற மக்கள் அதிகம் உள்ளதை காண முடிகிறது.தில்லையாடி குறித்து பல முறை படித்தும்,பிறர் சொல்லவும் கேட்டு அறிந்திருக்கிறோம்.தற்போது முதல் முறையாக இந்த மண்ணை மிதிப்பது பெருமிதமாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளது. குறுகிய காலம் மட்டுமே உயிரோடிருந்து வள்ளியம்மை செய்த தியாகத்தின் மூலம் பெண்களின் நிலையை குறிப்பாக இந்திய பெண்களின் நிலையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது பெருமையாக இருக்கிறது.இதன் காரணமாக தென்னாப்பிரிக்க மகளிருக்கும் உரிமைகள் கிடைக்க வழி ஏற்பட்டது.நெல்சன் மண்டேலாவின் முயற்சியால் 1994 லிருந்து தென்னாபிரிக்காவில் வள்ளியம்மையின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த மாதவ கிருஷண முதலியார்,வள்ளியம்மையின் தியாக உணர்வை இக்கால இளைஞர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் போராட முடியும் என்பதை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிரூபித்தவர் வள்ளியம்மை என்றார்.
முன்னதாக வள்ளியம்மையின் சந்ததியினர் வள்ளியம்மையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தியாகி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாடினர்.அரசு கிளை நூலகத்திற்கு நெல்சன் மண்டேலா குறித்த நூல்களை பரிசாக வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை ஊராட்சி உறுப்பினர் ப.கலைவாணன் வரவேற்றார்.
மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அருள்செல்வன்,கிராம பொதுநல சங்க தலைவர் எஸ்.ஜெகதீசன்,துணை செயலர் தமிழன்பன்,உலகத் தமிழர் பேரவை மாநில பொது செயலர் சி.முருகேசன்,காந்திய சிந்தனையாளர் கோவை சி.எஸ்.ராமகிருஷ்ணன்,திருநெல்வேலி காந்திய சிந்தனை மைய இயக்குனர் எஸ்.போஸ் ஊராட்சி உறுப்பினர்கள்,ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.ஒன்றியகுழு உறுப்பினர் ப.மோகன் நன்றி கூறினார்.
சரிஷா முனுசாமி என்பவர் வள்ளியம்மையின் உருவத்தை ஒத்தவராக இருந்ததால் அவரை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

