சிதம்பரம் நாடாளுமன்றத்தொகுதி: வேட்பாளர் அறிவிப்பில் அதிமுகவினர் அதிருப்தி
ிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 1977-க்கு பிறகு அதிமுக போட்டியிடுவதால் அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ள வேளையில், வேட்பாளர் அறிவிப்பால் அதிமுகவினர்


சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் 1977-க்கு பிறகு அதிமுக போட்டியிடுவதால் அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ள வேளையில், வேட்பாளர் அறிவிப்பால் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) ஏற்கனவே சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், மங்களூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி சீரமைப்பில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளிடக்கி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.
2009 தேர்தலில் பாமக வேட்பாளர் இ.பொன்னுசாமியைவிட கூடுதலாக 99,083 வாக்குகள் பெற்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றார். 1957 முதல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக ஒருமுறைதான் வெற்றி பெற்றுள்ளது. 1977-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் ஏ.முருகேசன் வெற்றி பெற்றுள்ளார். அதன் பிறகு அதிமுக, தனது கூட்டணி கட்சிகளுக்கே இத்தொகுதியை ஒதுக்கி வந்தது.
இந்நிலையில் 1977-க்கு பிறகு தற்போது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக போட்டியிடவுள்ளதால், அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினர் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி அதிமுகவினர் கோட்டையாக திகழ்கிறது. ஆனால் பாமக, திமுக வாக்குவங்கி உள்ள குன்னம் தொகுதியிலிருந்து அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ மா.சந்திரகாசி அறிவிக்கப்பட்டதால் அதிமுகவினர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட நாக.முருகுமாறன் எம்எல்ஏ, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுவில் இணைந்த லால்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.நடனமயிலோன், முன்னாள் எம்பி ஏ.முருகேசன், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெயராமன், கிள்ளை பேரூராட்சி தலைவர் வித்தியாதித்தன், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாகரன், நான் முனிசிபல் ஊராட்சி மன்றத் தலைவர் பிரஜேஷ்பட்டேல் உள்ளிட்ட மொத்தம் 83 பேர் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தனர். ஆனால் மக்களிடம், குறிப்பாக அதிமுகவினரிடம் அறிமுகமே இல்லாத மா.சந்திரகாசி வேட்பாளராக அறிவித்துள்ளதால், அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அதேபோன்று பாட்டாளி மக்கள் வேட்பாளராக குன்னத்தைச் சேர்ந்த கி.கோபாலகிருஷ்ணன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாக, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த நன்கு அறிமுகமான வேட்பாளர் ஒருவரை, அதிமுக வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அதிமுகவினர் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...