நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா: உள்ளூர் நடனக்கலைஞர்கள் வருத்தம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கிய போது 10 நாட்கள் நடைபெற்றது. அதன் பின்னர் 5 நாட்களாக குறைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழாவில்

News image
Updated On :28 பிப்ரவரி 2014, 9:31 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவில் உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதல் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கிய போது 10 நாட்கள் நடைபெற்றது. அதன் பின்னர் 5 நாட்களாக குறைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று நடனமாடுவதை இந்தியா முழுவதும், குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் மிகவும் விரும்புகின்றனர். ஏனென்றால் பதஞ்சலி வியாக்கிரபாதர் முனிவர்களுக்காக சிதம்பரத்திலே ஆனந்த நடனம் புரிந்த (Cosmic Dance) ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப்பெருமாள் வீற்றுள்ள சபையில் மனநிறைவோடு தங்களது நாட்டியத்தை அஞ்சலி செலுத்துவதை பெருமையாக கருதுகின்றனர்.

நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்க அதிக கலைஞர்கள் விரும்புவதால், 5 நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலியில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினரால் முடியவில்லை. ஆடல்வல்லான் வீற்றுள்ள சிதம்பரத்தில் பல்வேறு நாட்டியப்பள்ளிகள் உள்ளன. அதில் அதிகமானோர் நாட்டியம் பயின்று வருகின்றனர். ஆனால் உள்ளூரில் உள்ள இந்த நாட்டியக் கலைஞர்களுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்ற வருத்தம் உள்ளது. குறிப்பாக ஒரு நாட்டியப்பள்ளிக்கு 20 நிமிடங்கள்தான் ஒதுக்கப்படுகிறது. இதில் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட நாட்டிய மாணவியர்கள் நடனமாடுவதால், தனித்திறமையை காட்ட முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

எனவே உள்ளூர் கலைஞர்களுக்கு கூடுதலான நேரம் அல்லது நிகழ்வுகளை ஒதுக்க வேண்டும் என்றும், அப்படியில்லையெனில் நாட்டியாஞ்சலி விழாவை 6 நாட்களாக ஆக்கி, அதில் ஒருநாள் கலைஞர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என உள்ளூர் நாட்டியப்பள்ளி மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.