நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் 12 ஆயிரம் பேர் நாட்டியம் ஆடியுள்ளனர்: நாட்டியாஞ்சலி செயலர் தகவல்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 32 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக்

News image
Updated On :28 பிப்ரவரி 2014, 9:17 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 32 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடியுள்ளனர் என நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார்.

இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் அவர் பேசியது: டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் இந்த நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சங்கீதநாடக அகாதமி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பலரது உதவியோடு 32 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் 1600-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டியம் ஆடியுள்ளனர்.

இந்த ஆண்டு நாட்டியாஞ்சலியில் 73 நாட்டிய நிகழ்வுகளில், 423 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடுகின்றனர் என வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.