தேசிய சுற்றுப்புறசூழல் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தேசிய சுற்றப்புறசூழல் ஒழுங்கு முறை ஆணையம் அமைத்து ஒவ்வொரு திட்டத்திலும் ஏற்பட்டுள்ள சுற்றுப்புற சூழல் பாதிப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு


தேசிய சுற்றுப்புற சூழல் ஒழுங்கு முறை ஆணையம் அமைத்து ஒவ்வொரு திட்டத்திலும் ஏற்பட்டுள்ள சுற்றுப்புற சூழல் பாதிப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பட்யாக் வரும மார்ச் 31 ஆம் தேதிக்குள் சுற்றுப்புற ஓங்குமுறை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தீர்ப்பில், திட்டங்களுக்கு வனசட்டத்தின் படி சுற்றுச்சூழல் வனத்துறையிடம் அனுமதி பெறப்படுகிறது. ஆனால் 1988ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனச்சட்டத்தின்படி சுற்றுப்புற சூழல் கண்காணிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுப்புற சூழல் பாதிப்பு குறித்து மறுஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றார். இதனைதொடர்ந்து மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி பிரமாண பாத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி பட்யாக் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...