தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சோனியாகாந்திக்கு கோவில் கட்டியுள்ள தெலங்கானா காங். தலைவர்

தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சங்கர் ராவ் தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்ததற்காக காங். தலைவர் சோனியா காந்திக்கு கோவில்

News image
Updated On :8 ஜனவரி 2014, 1:39 pm

வேல்முருகன்

 தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சங்கர் ராவ் தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்ததற்காக காங். தலைவர் சோனியா காந்திக்கு கோவில் கட்டுகிறார் இதற்காக 500 கிலோ வெள்ளியில் 9அடி உயரத்தில் சோனியாவின் முழு உருவசிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலையை  தராபாத் -பெங்களூரு நெடுஞ்சாலையில் சோனியா காந்தி சாந்திவனம் என்ற பெயரில் கட்டப்படும்  கோவிலில் வைக்கவுள்ளார்.

சங்கர் ராவ்  தனது 9 ஏக்கர் நிலத்தை இக்கோவில் கட்டுவதற்காக  தானமாக வழங்கியுள்ளார். சோனியாகாந்தியின் பிறந்த நாளான டிசம்பர் ஒன்பதாம் தேதிக்கு பின் அவரது சிலை அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது முழு அளவில் பணிகள் நிறைவடைந்துள்ளது.

 இந்த சிலைக்கு தெலங்கானா தல்லி ( தெலங்கானா அம்மா) என்று பெயரிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம்அமைக்கபடும் என்று மத்திய அரசு உறுதியளித்ததது. இதனையடுத்து நன்றி தெரிவிப்பதற்காக சோனியாவிற்கு கோவிலை கட்டிவருவதாக சங்கர் ராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.