தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாஜகவைவிட்டு விலகியது தவறு: மீண்டும் இணைந்த எடியூரப்பா பேச்சு

தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து பதவி விலகினார். இதனைதொடர்ந்து கட்சியினருடன் ஏற்பட்ட மோதலை அடுதத

News image
Updated On :9 ஜனவரி 2014, 10:58 am

வேல்முருகன்

தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து பதவி விலகினார். இதனைதொடர்ந்து கட்சியினருடன் ஏற்பட்ட மோதலை அடுத்து பாஜகவில் இருந்து பிரிந்து கர்நாடக ஜனதா கழகம்  என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார்

 கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அக்கட்சி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் எடியூரப்பா பிரிந்து வந்து தேர்தலை சந்தித்தத்தால் கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைந்தது. இந்நிலையில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். , இதனைதொடர்ந்து  பாஜகவில் சேருவது பற்றி ஆலோசித்து வருவதாக எடியூரப்பா கூறிவந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இன்று பாஜகவில் அதிகாப்பூர்வமாக இணைவதாக அறிவித்த எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தொண்டர்கள் மற்றும் கட்சிபிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைதொடர்ந்து தனது கஜக கட்சியினருடன்  பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.

 அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கட்சியை விட்டு விலகி தவறு செய்து விட்டேன். நாங்கள் பழைய விஷயங்களை மறப்போம். கஜகவிற்கு சென்றதை மறந்துவிட்டேன் நீங்களும் மறந்துவிடுங்கள் . நாங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 20 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.