ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு
ஸ்ரீநகர் ஜம்முவுக்கு இடையே உள்ள 294 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து


ஸ்ரீநகர்-ஜம்முவுக்கு இடையே உள்ள 294 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக நெடுஞ்சாலை மூடப்பட்டது.
இந்நிலையில் பனிப்பொழிவு சற்று குறைந்ததையடுத்து இன்று மீண்டும் போக்குவரத்திற்காக சாலை திறந்துவிடப்பட்டது. ஸ்ரீநகரில் தற்போது மைனஸ் 0.7 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக்கில் நேற்று காலை 3.4மில்லிமீட்டர் அளவிற்கு பனிமழை பொழிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...