தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எம்பி தேர்தலில் எம்எல்ஏக்கள் போட்டியிடமாட்டார்கள் என கெஜ்ரிவால் விளக்கம்: பொய்யர் என பென்னி தாக்கு

அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யர் என்று மக்களவை தேர்தலில் சீட்கேட்டு பிரச்னை செய்து வரும் அக்கட்சி எம்எல்ஏ வினோத் குமார் பென்னி கூறியுள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின்

News image
Updated On :15 ஜனவரி 2014, 11:32 am

வேல்முருகன்

அரவித் கெஜ்ரிவால் பொய்யர் என்று மக்களவை தேர்தலில் சீட்கேட்டு பிரசசனை செய்து வரும் அக்கட்சி எம்எல்ஏ வினோத் குமார் பென்னி கூறியுள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் அரசியலையும் தாக்கி பேசிய அவர், இதுகுறித்து நாளை செய்தியாளர்களிடம் விரிவாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வினோத்குமார் பென்னிக்கு கடும் கண்டம் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வினோத்குமார் பென்னி டிசம்பர் மாதம் முதல் அமைச்சராக இருந்து வருகிறார்; அவருக்கு அமைச்சர் பதவி வழங்க நான் மறுத்தேன்.

இருப்பினும் கட்சியினரின் வேண்டுகோளின்படி அவருக்கு சீட் அளித்தேன். இப்போது லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் தர வேண்டும் என பிரச்னை செய்து வருகிறார். ஆனால் தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் யாருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் வழங்க கூடாது என கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறிவரும வினோக்குமார் பென்னி மீது  நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக அவருக்கு கட்சியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.