நெல்லை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் உள்பட இருவர் சாவு
உவரி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பாலசிங் மகன் பாலகிருஷ்ணன் (13). அங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் கணேசன் (13).


திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே குளத்தில் நண்பர்களுடன் குளித்த பள்ளி மாணவன் உள்பட இருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.
உவரி அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பாலசிங் மகன் பாலகிருஷ்ணன் (13). அங்குள்ள பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் கணேசன் (13). நண்பர்களான இருவரும், மற்றும் அப்பகுதியை சேர்ந்த மாவேஷ், சுமன், அஜய் ஆகியோர் சொக்கலிங்கபுரத்தில் மேற்கு பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனராம்.
சுமன், மாவேஷ், அஜய் மூவரும் குளித்து விட்டு வீடு திரும்பி விட்டனர். பாலகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் நீண்ட நேரம் குளித்ததாக கூறப்படுகிறது.ஆழமான பகுதியில் குளித்த இருவரும் நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்தனர். நீண்ட நேரமாக இருவரும் வீடு திரும்பாததால் பெற்றோர் குளத்திற்கு சென்று தேடினர்.அப்போதுதான் இருவரும் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
தீயணைப்பு படையினர் இருவரது உடலையும் மீட்டனர். உவரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...