தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விஜயகாந்த், பிரமலதா சென்னையில் போட்டியிட வேண்டும்: தேமுதிக.,வினர் விருப்ப மனு

நாடாளுமன்ற தேர்தலில்  40 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ள தே.மு.தி.க.வினர் இன்று முதல் விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என்று

News image
Updated On :23 ஜனவரி 2014, 11:56 am

வேல்முருகன்

நாடாளுமன்ற தேர்தலில்  40 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ள தே.மு.தி.க.வினர் இன்று முதல் விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வாங்குவதற்காக இன்று காலையில் இருந்தே ஏராளமான தே.மு.தி.க.வினர் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர் 

காலை 11 மணிக்கு விருப்ப மனு வினியோகத்தை அக்கட்சியின். இளைஞர் அணி தலைவர் சுதீஷ் தொடங்கி வைத்தார். விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தினார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள், செந்தாமரை கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் ஆகியோர் மனு கொடுத்தனர்.

பிரேமலதா தென் சென்னையில் போட்டியிட வேண்டும் என தென் சென்னை மாவட்ட அவைத்தலைவர் கே.எஸ்.மலர்மன்னன் மனு கொடுத்தார்.

இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் கள்ளக்குறிச்சி, வேலூர் தொகுதிகளில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மனு கொடுத்தார்.

இன்று காலை மட்டும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தே.மு.தி.க. வினர் 184 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.