பழனி மலைக்கோயில் உண்டியல் இருநாள் காணிக்கை வரவு ரூ.3.63 கோடியை தாண்டியது
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 14 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின்


பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 14 நாட்களில் நிறைந்ததைத் தொடர்ந்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறந்து எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு மொத்தம் ரூ.3.63 கோடியை தாண்டியது.
பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இரண்டு நாள் எண்ணிக்கையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் வரவு ரூபாய் மூன்று கோடியே 63 லட்சத்து 7 ஆயிரத்து 790 கிடைத்தது. உண்டியலில் பக்தர்கள் தங்கத்தாலான காசுகள், தாலி, செயின், வேல், உருவங்களும், வெள்ளியால் ஆன வேல், உருவம், நெற்றிப்பட்டை, கொடை, கொலுசுகள், பார் வெள்ளி, சுவாமி உருவம், வீடு போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
தங்கம் 904 கிராமும், வெள்ளி 19 ஆயிரத்து 468 கிராமும் கிடைத்தன. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இலங்கை, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 520 ம் வரப்பெற்றன. இவை தவிர ஏராளமான பக்தர்கள் மிட்டாய்கள், பித்தளை பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், பரிவட்டங்கள், நவதானியங்கள், ரிஸ்ட் வாட்சுகள், ஏலக்காய் மாலைகளை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலை கணக்கியல் அலுவலர் பழனிச்சாமி மற்றும் பலர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், பழனி இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சிட்டி யூனியன் வங்கி உள்ளிட்ட ஏராளமான வங்கிகளின் பணியாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...