திருவண்ணாமலையில் தேசிய வாக்காளர் தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 கி.மீ. தூரத்துக்கு கிரிவலப்பாதையில் மனித சங்கலி துவங்கியுள்ளது.
அருணாச்சலேஸ்வரர் மலையை சுற்றி வரும் பௌர்ணமி கிரிவலம் 14 கி.மீ. தூரம் ஆகும். கிரிவலப்பாதையில் நடக்கும் இந்த மனித சங்கிலியை மாவட்ட ஆட்சியர் ஆ. ஞானசேகரன் துவக்கி வைத்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சா. வளர்மதி, கோட்டாட்சியர் கே. முத்துக்குமாரசாமி, வட்டாட்சியர் வேடியப்பன், அரசுத் துறை அதிகாரிகள் பள்ளி, மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
இதே போல, வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி நாளை காலை 9 மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து வேலூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் வரையில் தொடர் ஓட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!





