எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சிறுமியின் திருமண ஏற்பாடுகள் தடுத்து நிறுத்தம்

வந்தவாசி அருகே ஏற்கனவே திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சிறுமிக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்க அவரது உறவினர்கள் செய்த திருமண ஏற்பாடுகளை அதிகாரிகள் திங்கள்கிழமை தடுத்து

News image
Updated On :27 ஜனவரி 2014, 10:51 am

கணேஷ்கிரி

வந்தவாசி அருகே ஏற்கனவே திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சிறுமிக்கு மீண்டும் திருமணம் செய்துவைக்க அவரது உறவினர்கள் செய்த திருமண ஏற்பாடுகளை அதிகாரிகள் திங்கள்கிழமை தடுத்து நிறுóததினர்.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர் ரேவதி(17).(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறாராம். இவருக்கும் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் மணிவண்ணன்(25) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு நவ.15-ம் தேதி மருதாடு கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவலின்பேரில் மாவட்ட சமூக நலத்துறையினர் சென்று அத்திருமணத்தை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மணிவண்ணனுக்கு அச்சிறுமி ரேவதியை வெளியூர் கோயிலில் திருமணம் செய்து வைக்க மீண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாம். இதற்காக அச்சிறுமி மருதாடு கிராமத்துக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தாராம்.  இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் துரை, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சந்தோஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அக்கிராமததுக்கு திங்கள்கிழமை சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அச்சிறுமியை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.