தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: திருக்கடையூரில் சரத்குமார் பேட்டி 

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2014, 7:42 am

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் திருக்கடையூரில் செவ்வாய்க்கிழமை இன்று சுவாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது...

 வரும் மக்களவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாங்கள் அங்கம் வகிக்கிற அதிமுக தலைமையிலான கூட்டணி தலைவர்தான் முடிவு செய்வார்.

வரும் 16 ந்தேதி நெல்லையில் கட்சியின் 2 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா  நாற்பதும் நமக்கே என்று சொன்னதை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டிய நிலைகள் குறித்து இந்த மாநாட்டில் முடிவு செய்யப்படும்.

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டிய ஒன்று. அதை மீட்க  வேண்டும்  என்று தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்.

தமிழகத்தில் நரேந்திர மோடியின் தாக்கத்தால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி அமையும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு சிறந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மத்தியிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால் ஜெயலலிதா சொன்னதுபோல் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும்  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.