கெஜ்ரிவால் அரசுக்கு மீண்டும் சறுக்கல்
மகளிர் ஆணையரை நீக்கும் தில்லி அரசின் பரிந்துரையை அம்மாநில துணை நிலை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு


மகளிர் ஆணையரை நீக்கும் தில்லி மாநில அரசின் பரிந்துரையை அம்மாநில துணை நிலை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் சோதனை நடத்துவதாக கூறி, உகாண்டா பெண்ணை வலுக்கட்டாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய அம்மாநில சட்ட அமைச்சர் சோம்நாத் பார்திக்கு எதிராக தில்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் பர்கா சிங் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனால் கோபமடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பினார். ஆனால் இவ்விவகாரத்தில் மேலும் விளக்கம் தேவை எனக்கூறி, பரிந்துரையை துணை நிலை ஆளுநர் நஜீப் சங் திருப்பி அனுப்பினார். இது கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் சரிவாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...