ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

26 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 180 பேர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸôரும், மக்களவைத் தேர்தலுக்காக அண்மையில் பணியிட மாற்றம்

News image
Updated On :2 ஜூலை 2014, 10:00 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 26 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட180 போலீஸார் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸôரும், மக்களவைத் தேர்தலுக்காக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களும் என மொத்தம் 26 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்பட 180 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை புதன்கிழமை உத்தரவிட்டார்.

பணியிடம் மாற்ற செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு சில போலீஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்ந்து ஒருமாதம் கூட நிறைவு பெறாத நிலையில் தற்போது இடமாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.