டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிராவல் குவாரியில் பொக்லைன் இயந்திரம் மோதி டிராக்டர் டிரைவர் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் பகுதியில் இயங்கி வரும் கிராவல் குவாரியில் புதன்கிழமை மண் அள்ளும் பொக்லைன் இயந்திரம் மோதியதில் டிராக்டர் டிரைவர் ராமலிங்கம்(45) சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
Updated On :2 ஜூலை 2014, 12:07 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் பகுதியில் இயங்கி வரும் கிராவல் குவாரியில் புதன்கிழமை மண் அள்ளும் பொக்லைன் இயந்திரம் மோதியதில் டிராக்டர் டிரைவர் ராமலிங்கம்(45) சம்பவ இடத்திலேயே பலியானார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த அரசூர் பகுதியில் அரசின் அனுமதியோடு ஞான பிரகாசம் என்பவர் கிராவல் குவாரியை நடத்தி வருகின்றார். இந்த குவாரியில் இருந்து கிராவல் மண் பல பகுதிகளுக்கு டிப்பர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த குவாரியில் அதே பகுதியை சேர்ந்த நைனா கண்ணு மகன் ராமலிங்கம் அவரது சொந்த டிராக்டரை வைத்து கிராவல் மண் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் இவர் கிராவல் எடுக்கும் பகுதியில் டிராக்டரை நிறுத்தி விட்டு கிராவல் எடுக்க உரிய ரசீதை எடுத்துக் கொண்டு அருகில் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் பக்கெட் இவரது தலையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த குவாரியில் குவிந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொன்னேரி ஆர்.டி.ஓ மேனுவேல் ராஜ், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி சிவராஜ், பொன்னேரி தாசில்தார் முரளி விரைந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து பலியான ராமலிங்கத்தின் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பொக்லைன் இயந்திர டிரைவரான செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாஷா மகன் சர்தார்(21) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.