கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீதிமன்ற உத்தரவு என்பதால் தடையை மீறி போகவில்லை : திருமாவளவன் பேட்டி

நத்தம் காலனிக்கு இளவரசன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், நீதிமன்ற தடையை மீறிப் போகவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

News image
Updated On :4 ஜூலை 2014, 7:52 am

ரவி

நத்தம் காலனிக்கு இளவரசன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், நீதிமன்ற தடையை மீறிப் போகவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த தருமபுரி செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர் யாரும் தருமபுரிக்கு போகக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதாலேயே போகவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு, ஜனநாயக விரோதமானது.

அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், தமிழக அரசு தலித் விரோதமாக செயல்படுவதாகவும், ராமதாஸின் ஜாதி வெறி அரசியலைக் கண்டு தமிழக அரசு அஞ்சுகிறதோ என்று சந்தேகமாக உள்ளது என அவர்  குற்றச்சாட்டினார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து கட்சியினரிடையே கருத்து கேட்க தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.