தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அறந்தாங்கி அருகே 4.29 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் புறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.4.29 கோடி மதிப்புள்ள 15 கிலோ 337கிராம்  தங்க கட்டிகள் சனிக்கிழமை கைப்பற்றப்பட்டன. அதை

News image
Updated On :5 ஜூலை 2014, 11:02 am

கவியழகன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.4.29 கோடி மதிப்புள்ள 15 கிலோ 337கிராம்  தங்க கட்டிகள் சனிக்கிழமை கைப்பற்றப்பட்டன. அதை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பல்வேறு இடங்களில் மத்திய வருவாய் புலானாய்வு துறையினர், கடலோரா காவல்படையினர் தமிழக காவல்துறையினர் இணைந்து பாதுகாப்புடன் கண்காணித்து வந்தனர்.சனிக்கிழமை அதிகாலை கோட்டைப்பட்டிணம் வாகனச்சோதனைசாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்ட போது அவர்கள் வைத்திருந்த 3 குளிர்பானபாட்டிலில் இருந்த 34 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர் இவற்றின் மதிப்பு 4 கோடியே 29 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த சையது ஹசன் மகன் நசீர்அலி(34) மற்றும் அதே ஊரை சேர்ந்த முகமது நிசார் மகன் முகமது அப்துல்கலாம் ஆசாத்(25) என்பது தெரியவந்தது. இந்த நடவடிக்கையில் தூத்துகுடியை சேர்நத மத்திய வருவாய்  புலான்ய்வு துறையை சேர்ந்த கண்காணிப்பாளர் சாமிநாதன், ஆய்வாளர்கள் அருணாசலம், நாகராஜன், முரளிதரன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து மத்திய புலனாய்வு துறை உதவி இயக்குநர் பார்த்திபன் கூறுகையில், கடலோர மாவட்டங்களில் இது போன்ற கடத்தல்களை தடுக்க கடலோர காவல்படை உதவியுடன் பாதுகாப்பு அதிகப்படுத்தியுள்ளதாகவும் கடலில் இவர்களை பிடிப்பதை விட பொருட்களை சாலைமார்க்கத்தில் எளிதாக கைப்பற்றலாம் எனவே சாலைமார்க்கத்தில் இச் சோதனை நடைபெறுகிறது எனவும் சில மீனவர்கள் பணத்திற்காக இந்நடவடிக்கைக்கு துணையாக இருப்பதாகவும்  இப்போது பிடிபட்ட நபர்களும் இது மாதிரி பணத்திற்கு ஆசைப்பட்டு இச்செயலில் இறங்கியிருப்பதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.