நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இளம்பெண் திருமணம் நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.  இந்நிலையில் பழனியில் திருமண வயது வராத

News image
Updated On :9 ஜூலை 2014, 1:53 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் புதன்கிழமை நடைபெறவிருந்த இளம்பெண் திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.  இந்நிலையில் பழனியில் திருமண வயது வராத பெண் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக மாவட்ட குழந்தைகள் நல்வாழ்வுத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.  இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல்வாழ்வு அலுவலர் பெரியதுரை, அடிவாரம் போலீஸார் ஆகியோர் திருமணம் நடைபெற இருந்த அடிவாரம் தனியார் திருமண மண்டபத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்த மணப்பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்பது தெரியவந்தது.  இதைத் தொடர்ந்து பெண் வீட்டார், மற்றும் பழனி அருகே பாப்பம்பட்டி லட்சுமாபுரத்தை சேர்ந்த மாப்பிள்ளை லோகநாதன்(26) வீட்டாரை அடிவாரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த அதிகாரிகள் திருமண வயதுக்கு முன்னர் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். 

மேலும், இரு வீட்டாரும் திருமண வயது வந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.