பழனியில் சூறைக்காற்று
தமிழகத்தில் பருவ மாற்றங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவும், பின்னதாகவும் வந்து கணிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. காற்றடிக்கும் மாதமான ஆடிமாதம்


பழனியில் கடந்த சிலநாட்களாக திடீர், திடீரென வீசும் சூறைக்காற்றால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் பருவ மாற்றங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவும், பின்னதாகவும் வந்து கணிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. காற்றடிக்கும் மாதமான ஆடிமாதம் வருமுன்னரே தற்போது பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. பழனியிலும் சூறைக்காற்றால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் வேலை நிமித்தமாக இருசக்கரவாகனங்களில் போவோர், வருவோர் தூசுமண்டலத்தால் வாகனத்தை ஓட்ட மிகவும் அவதிப்படுகின்றனர். மலைக்கோயிலுக்கு இயக்கப்படும் ரோப்காரும் காற்றின் வேகத்தால் அவ்வப்போது நிறுத்தி இயக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. காற்றின் காரணமாக வெயிலின் விளைவை காட்டிலும் வேகமாக நிலத்தடிநீர் குறைந்தும் வருகிறது. புதன்கிழமை பழனி பைபாஸ் சாலையில் உள்ள திருக்கோயில் தீம்பார்க்கில் இருந்த சுமார் 60வயது மதிக்கத்தக்க அரசமரம் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒடிந்து விழுந்தது.
நல்ல வேளையாக மரத்தின் அருகே யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. ஒடிந்த மரம் திருக்கோயில் அதிகாரிகளால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...