விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த மக்பூல் மகன் ஜாகீர்உசேன்(34) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி மகன் செந்தில்குமார்(29) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து ஒரு மோட்டார் பைக்கில் திருச்சி நோக்கி வந்தனர். வரும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் என்ற இடம் வரும்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த சைக்கிள் மீது பைக் மோதியது. இதில் ஜாகீர்உசேன், செந்தில்குமார், சைக்களில் வந்த வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூவரையும் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். அதில் சிகிச்சை பலனின்றி ஜாகீர் உசேன் புதன்கிழமை உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.