டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து இருவழி சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதியதில்

News image
Updated On :12 ஜூலை 2014, 9:31 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து இருவழி சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதியதில் டிரைவர் திருவேங்கடம் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திர போக்குவரத்து கழக பேருந்து ஆந்திர மாநிலம் திருமலா நோக்கி அதிகாலை 2மணி அளவில் 30 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த பேருந்து பெரியபாளையம் அருகே தண்டலம் பஜார் பகுதியில் வந்த போது நிலைதடுமாறி இருவழி சாலையை பிரிக்க நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் சாலை தடுப்பின் மீது மோதி அதை உடைத்து அதன் மேல் ஏறி நின்றது.

அதிவேகமாக வந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் உள்ளிருந்த பயணிகள் முன் கதவில் பேருந்து பக்கவாட்டில் பலமாக மோதிக்கொண்டனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் பயணிகளை மீட்டதோடு இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் படுகாயமடைந்த  பேருந்தின் டிரைவரான ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த திருவேங்கடத்தை(46) சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேஷ்வரி(29), பிரசாந்த்(29), ராஜா(50), சின்ன நாயக்கர்(60), சூரிசேகர்(28), கவிதா(27), சேகர்(35), கிரிதரன்(20), பாண்டியன்(40), மார்த்தான்(50) ஆகிய 10 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.