கோவில் கும்பாபிஷேகத்தில் மூவரிடம் 14 சவரன் நகை பறிப்பு: 2 பெண்களுக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் ஞாயிறன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது 3 பெண்களிடம் 14 சவரன் நகைகளை 2 பெண்கள் பறித்து


கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் ஞாயிறன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது 3 பெண்களிடம் 14 சவரன் நகைகளை 2 பெண்கள் பறித்து சென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில் அருள்மிகு வினைதீர்க்கும் விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் ஞாயிறன்று விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்தனர்.
பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு 2 பெண்கள் மூதாட்டிகளின் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது கோவில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றும்போது முண்டியடித்த கூட்டத்தில் புகுந்த இந்த பெண்கள் சிறிய கட்டிங் பிளேயரை கொண்டு கோட்டக்கரை பகுதியை சேர்ந்த ரங்கன் மனைவி சந்தானலட்சுமி(56) என்பவரின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியையும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கோமளா(55) என்பவரிடம் 10 சவரன் தாலி மற்றும் தங்க சங்கிலியையும், பிரித்வி நகரை சேர்ந்த காசி மனைவி சுமித்ரா(60) என்பவரிடம் 2 சவரன் தங்க சங்கிலியையும் அறுத்து பறித்து சென்றனர்.
மேலும் இவர்கள் கோட்டக்கரையை சேர்ந்த மலைசாமி மனைவி சுந்தரி(54) என்பவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலி சரடை அறுக்கும் போது சுதாரித்த அவர் தாலி சரடை பிடித்துக் கொண்டதால் அவரது நகை தப்பியது. அவர் கூறிய தகவலின் பேரில் கோவில் கும்பாபிஷேக வீடியோ காட்சிகளை போலீஸார் ஆய்ந்த போது ஒரே மாதிரி உடையணிந்த இரு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்துக் கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீஸார் புகாரின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பகுதியில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது வரும் பெண் பக்தர்களிடம் நகை பறிப்பது வாடிக்கையாக உள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...