வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை
கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் மேட்டுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோபிநாத்(28). இவர் அப்பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை


கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் பகுதியில் பூட்டிக்கிடந்த வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் மேட்டுத் தெரு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் கோபிநாத்(28). இவர் அப்பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை இவரது மனைவி நந்தினி மற்றும் குழந்தைகளுடன் அவரது மாமனார் ஊரான பூரிவாக்கம் பகுதிக்கு சென்றிருந்தார்.
தொடர்ந்து இவர் திங்களன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவில் பூட்டு இருந்த தாழ்ப்பாள் கீலோடு பெயர்க்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகைகளை காணாது திடுக்கிட்டார்.
மர்ம நபர்கள் இரவு வீட்டிற்குள் புகுந்து 10 சவரன் நகைகளை கொள்ளை அடித்தது குறித்து கோபிநாத் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கவரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...