மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கிணற்றில் சிறுவன் சடலம்

மொளசூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அப்பகுதியில் டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் தினேஷ்குமார்(5) திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வருகிறார்.

News image
Updated On :15 ஜூலை 2014, 9:17 am

சீனிவாசன்

திண்டிவனம் அருகே பள்ளியில் பயிலும் ஐந்து வயது சிறுவன் காணாமல் போன நிலையில் அவரது வீட்டின் அருகே கிணற்றில் பிணமாக செவ்வாய்கிழமை  மீட்கப்பட்டார்.

மொளசூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அப்பகுதியில் டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் தினேஷ்குமார்(5) திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வருகிறார்.திங்கள்கிழமை அதிகாலை ராமமூர்த்தி பணிக்கு செல்லும் போது அவரது மகனை படுக்கையில் பார்த்து உள்ளார்.

இந்நிலையில் காலையில் பள்ளிக்கு அனுப்பி வைக்க பார்த்த போது தினேஷ்குமாரை காணவில்லை.அவரை வீட்டின் அருகில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து ராமமூர்த்தி கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

செவ்வாய்கிழமை காலை ராமமூர்த்தி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தினேஷ்குமாரின் சடலத்தை அப்பகுதி மக்கள் கண்டனர்.சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்த போது இறந்த தினேஷ்குமாரின் உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.சடலத்தை கைப்பற்றிய போலீஸôர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தை விழுப்புரம் மாவட்ட எஸ்பி பகலவன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.காணாமல் போன தினேஷ்குமார் கொலை செய்து கிணற்றில் விசப்பட்டு இருக்கலாமென்ற கோணத்தில் போலீஸôர் விசாரணையை துவக்கி  உள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.