6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவம் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும்

News image
Updated On :17 ஜூலை 2014, 10:44 am

முத்துகுமார்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள், வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவம் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 170 பயிற்சி மருத்துவர்களும் கோரிக்கை அட்டை அணிந்தபடி இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறோம். மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான உதவித்தொகையை ரூ.20 ஆயிரமாகவும், முதுநிலை மருத்துவம், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு முறையே ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன்படி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம்.

தில்லி, உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழக அரசு வழங்கி வரும் உதவித்தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால், தமிழகத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் உள்ளிட்டவை குறைந்து சுகாதாரத்தில் மேம்பட்ட நிலை ஏற்பட்டு வருகிறது.இதுதவிர விடுமுறையே எடுக்காமல் மாதம் முழுவதும் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்களுக்கு உடனடியாக ஊதவித் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சித்த மருத்துவக் கல்லூரி: இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தங்களது உதவித் தொகையை உயர்த்தக் கோரி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.