தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் கீழத் தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் ஆடி உற்ஸவக் கொடியேற்றம்

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :19 ஜூலை 2014, 12:14 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசி்த்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன்கோயில் ஆடி மாத உற்சவம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி வீதிவலமாக கொண்டு வரப்பட்டு உற்சவரான ஸ்ரீமாரியம்மன் முன்னிலையில் கருவறை எதிரே உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. திரளான மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசித்தனர்.

ஜூலை 22-ம் தேதி செவ்வாய்க் கிழமை தெருவடைச்சான் உற்ஸவமும், 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும், 28-ம் தேதி திங்கள்கிழமை தீமிதி உற்சவமும் நடைபெறுகிறது. ஜூலை 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை விடையாற்றி உற்சவமும்,  ஜூலை 30-ம் தேதி புதன்கிழமை மாலை மஞ்சள் நீர் விளையாட்டும், இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவுடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் என்.வீராசாமிபிள்ளை, அறங்காவலர்கள் என்.கலியமூர்த்தி, என்.செல்லத்துரை ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.