தொழிற்சாலையில் காப்பர் தகடுகளை திருடிய மெக்கானிக் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காப்பர் தகடுகளை திருடிய மெக்கானிக் சைலேஷ் குமார்(38) ஆரம்பாக்கம் போலீஸôரால் கைது செய்யப்பட்டு ஞாயிறன்று


கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காப்பர் தகடுகளை திருடிய மெக்கானிக் சைலேஷ் குமார்(38) ஆரம்பாக்கம் போலீஸôரால் கைது செய்யப்பட்டு ஞாயிறன்று கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜ கண்டிகை பகுதியில் தனியார் தொழிற்சாலையில் இயந்திரம் ஒன்று பழுதடைந்த நிலையில் அந்த பழுதை நீக்க கும்மிடிப்பூண்டி விவேகானந்தா நகரை சேர்ந்த அவத் கிஷோர் மகன் சைலேஷ் குமார் என்பவர் வந்திருக்கிறார்.
இந்த இயந்திரத்தின் பழுதை நீக்கிய சைலேஷ்குமார் தொழிற்சாலையில் இருந்து போகும் போது தொழிற்சாலை வளாகத்தில் இருந்து 15 கிலோ எடையுள்ள காப்பர் தகடுகளை திருடி சென்றுள்ளார். அப்போது இவரை தொழிற்சாலை கேட் பகுதியில் வாட்ச்மேன் சோதித்த போது இவர் காப்பர் தகடுகள் திருடியது தெரியவந்து இவர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து தொழிற்சாலை மேற்பார்வையாளர் நாகலிங்கம்(49) அளித்த புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸôர் வழக்கு பதிவு செய்து சைலேஷ் குமாரை கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...