டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளி நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோவில் பயணிக்கும் மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பள்ளி முடித்து வீடு திரும்பவும் உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆட்டோக்களில் முண்டி அடித்து பயணம்

News image
Updated On :20 ஜூலை 2014, 12:18 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பள்ளி முடித்து வீடு திரும்பவும் உரிய நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் ஆட்டோக்களில் முண்டி அடித்து பயணம் செல்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ஆரம்பாக்கம், ஏடூர், கும்புளி போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்க செல்கின்றனர்.இந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலை நேரத்திலும், பள்ளி முடிந்ததும் வீடு திரும்ப மாலை நேரத்திலும் உரிய பேருந்து வசதி இல்லாததால் இவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஏடூர், கும்புளி போன்ற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனியார் பேருந்து வசதி கூட இல்லை. எனவே இவர்கள் ஆட்டோக்களில் தினமும் 20 ரூபாய் கொடுத்து பள்ளிக்கு வந்து போகின்றனர்.

காலையில் பள்ளி நேரத்திற்கு ஏற்றார் போல இல்லாமல் இப்பகுதி வழியே கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் பேருந்து மாலையில் பள்ளி விடுவதற்கு முன்பேயே சென்று விடுகிறது. எனவே மாணவர்கள் அரசு தரும் இலவச பஸ் பாûஸ கூட பயன்படுத்த இயலுவதில்லை. அத்தோடல்லாமல் ஆட்டோ பயணம் பல நேரங்களில் ஆபத்து பயணமாகவும் மாறி உள்ளது.

எனவே இப்பகுதி மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏடூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நகர பேருந்து வசதியை ஏற்படுத்தி தர அரசு ஆவண செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.