ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: பயணிகள் குளிக்கத் தடை
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப் படுகின்றது. கடந்த 18ஆம் தேதி பிலிகுண்டுலுவை இந்த நீர் வந்தடைந்தது.










