கச்சத் தீவை தமிழக முதல்வர் மீட்பார்: அமைச்சர் பி.பழனியப்பன்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் ஒன்றிய ஜெயலலிதா பேரவையின் சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை பொதுமக்களிடம் சேர்க்கும் வகையில் அம்மா பேரவை மக்கள் முகாமை தொடங்கி வைத்து,


கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் ஒன்றிய ஜெயலலிதா பேரவையின் சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகளை பொதுமக்களிடம் சேர்க்கும் வகையில் அம்மா பேரவை மக்கள் முகாமை தொடங்கி வைத்து, பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசும்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தின் மூலம் கச்சத்தீவை மீட்பார் எனத் தெரிவித்தார்.
தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அம்மா பேரவை மக்கள் முகாம் நடந்து வருகிறது. பர்கூரில் இந்த முகாமை உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்து தமிழக அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
பின்னர், பர்கூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது:
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின் போது அதிமுக சார்பில் 54 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த 54 தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறார். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் முதல்வர்கள் நிறைவேற்றாத திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். உத்தரபிரேதச மாநிலத்தில் அரசு அறிவித்தபடி மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு ஒத்துழைப்பு வழங்காத நிலையிலும் அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றியது.
நீதிமன்றம் மூலம், காவிரி, முல்லையாறு ஆகிய பிரசனைகளில் தமிழக அரசின் உரிமைகளை தமிழக முதல்வர் போராடி பெற்றுத் தந்தார். அதேபோல், தமிழக மீனவர்களின் உரிமைகளை காக்கும் வகையில் கச்சத் தீவையும் தமிழக முதல்வர் மீட்டுத் தருவார்.கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமே கொண்டு வரப்பட்டன. தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு கட்சி தொண்டனும், கட்சி நிர்வாகியும் ஒருங்கினைந்து செயல்பட்டு வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் என்றார்.
ஜெயலலிதா பேரவையின் பர்கூர் ஒன்றியச் செயலாளர் ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலளர் வி.கோவிந்தராஜ், கே.அசோக்குமார் எம்பி, தலைமை பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, ஒன்றியச் செயலாளர் ஆர்.ஜெயபாலன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.அர்சுணன், கே.இ.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ, கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...