ஸ்ரீரங்கம் கோயிலிருந்து ஸ்ரீஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள், வஸ்திரங்கள், மங்களப் பொருள்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும். அதேபோல்


ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி, வஸ்திர மரியாதை செவ்வாய்கிழமை வந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும் மங்களப் பொருள்கள் பரிவர்த்தனை நடைபெறுவது வழக்கம்.
ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள், வஸ்திரங்கள், மங்களப் பொருள்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது, ஸ்ரீரங்கம் கோயிலிருந்து வஸ்திர மரியாதைகள் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்வது வழக்கம்.
அதன்படி, ஆடிப்பூரத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் கோயிலிருந்து, ஸ்ரீஆண்டாளுக்கு பட்டுப் புடவை, ரெங்கமன்னாருக்கும், கருடாழ்வாருக்கும் பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், பழ வகைகள், மாலைகள், கற்கண்டு, பேரிச்சம்பழம் என மங்கள பொருட்கள் கொண்டுவரப்பட்டது.
இப் பொருட்களை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பொ.ஜெயராமன், அறங்காவலர் குழுத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் ஆண்டாள் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோரிடம் வழங்கினர். பின்னர் இது சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...