கோவையில் 22 இந்து இயக்கத் தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு
கோவை காவல் துறைக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். கோவை பகுதியில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடிக்கும் என்றும் கூறியிருந்தார். இதை அடுத்து போலீஸார் 2 தனிப்படை அமைத்து மர்ம நபர் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் தேடுதல் வேட்டையிலும் இறங்கினர்.










