நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பழனி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் வேலப்பன்.  இவர் திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறார்.  இவரது மகன் முனியப்பராஜன்(29).  இவருக்கு திருமணமாகி

News image
Updated On :30 ஜூலை 2014, 2:08 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் இரு வாலிபர்கள் பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் வேலப்பன்.  இவர் திருப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறார்.  இவரது மகன் முனியப்பராஜன்(29).  இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.  முனியப்பராஜனின் நண்பர் கொசவபட்டியை சேர்ந்த கருப்பணன் மகன் கதிர்வேல்(23).  முனியப்பராஜனின் நண்பரின் குலதெய்வம் கோயில் பழனியை அடுத்த தேக்கன்தோட்டம் அருகே உள்ளது.  இக்கோயிலில் புதன்கிழமை கிடாவெட்டு திருவிழா நடைபெற்றதால் முனியப்பராஜனும், கதிர்வேலும் மோட்டார்சைக்கிளில் கோயிலுக்கு வந்துள்ளனர்.  அப்போது விருந்திற்காக வெற்றிலை, பாக்கு வாங்க இருவரும் புளியமரத்துசெட்டுக்கு வரும் போது எல்லைக்கருப்பண்ணசாமி கோயில் அருகே இருந்த திருப்பத்தில் இருந்த பாறையில் மோதி இருவரும் தலைமையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.