/

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி குஞ்ஞி முகமது கைது செய்யப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த

News image
Updated On :31 ஜூலை 2014, 10:34 am

சீனிவாசன்

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி குஞ்ஞி முகமது கைது செய்யப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை கேரள மாநிலம் மலப்புரம் பழக்கன்கராவில் சிபிசிஐடி போலீஸார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். இவர் மீது வெடிபொருட்களை கை மாற்றி கொடுத்ததாகவும்,பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் இன்று மாலை கோவை ஜெ.எம்.5 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். இவ்வழக்கில் மேலும் 3 பேர் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.