டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

காதல் விவகாரத்தில் மோதல்: மனவேதனையில் இளம்பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அடுத்த காட்டு அப்பாவரம் பகுதியை சேர்ந்த முத்து(23)என்பவர் அதே பகுதியை சேர்ந்த சித்ரா(21) என்பவருடனான காதல் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து 9 பேர் கைது

News image
Updated On :2 ஜூன் 2014, 9:51 am

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த காட்டு அப்பாவரம் பகுதியை சேர்ந்த முத்து(23)என்பவர் அதே பகுதியை சேர்ந்த சித்ரா(21) என்பவருடனான காதல் விவகாரத்தில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து 9 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மனவேதனையில் சித்ரா மண்ணெண்ணை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த காட்டு அப்பாவரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் முத்து அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் சித்ராவை காதலித்து இருக்கிறார். இந்நிலையில் சித்ராவின் அக்கா சந்தியா அருகில் உள்ள ஓபசமுத்திரம் பகுதியில் திருமணம் ஆகி குழந்தை பேறுக்காக தனது தாய் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் சித்ரா முத்துவிடம் தனது அக்கா வீட்டில் இருப்பதால் செல்போனில் அழைக்க வேண்டாம் என கூறியிருக்கிறார்.

இந்நிலையில் முத்து சித்ராவுடன் பேச செல்போனில் அழைத்த போது சித்ராவின் அக்கா சந்தியா செல்போனை எடுத்து பேசியிருக்கிறார். அவர் முத்துவை திட்டி இனி மேல் சித்ராவை தொடர்பு கொள்ள வேண்டாம், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளோம் என கூறவே இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்

இதன் பிறகு சந்தியா இது குறித்து அவரது கணவரான மகேஷிடம் தெரிவிக்க அவர் 10 பேருடன் ஓபசமுத்திரத்தில் இருந்து காட்டு அப்பாவரம் வந்து முத்துவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது முத்துவிற்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் உறவினர்கள் வந்துள்ளார்கள்.இந்த மோதலில் முத்துவின் தந்தை ஜெயராமனுக்கு தலையில் பீர் பாட்டிலால் அடித்ததில் படுகாயம் ஏற்பட்டது. தொடர்ந்து முத்து மற்றும் அவரது உறவினர்கள் மகேஷ் தரப்பினரை அடித்து கட்டி வைத்துள்ளனர்,

இது மோதல் குறித்து இரு தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில் முத்து தரப்பில் குமார். பாபு. தங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மகேஷின் தரப்பில் இருந்து சித்ராவின் தந்தை பன்னீர் செல்வம், அண்ணன் ராஜேஷ், உறவினர்கள் சதீஷ், குமரேசன், விஜயன், ரமேஷ் ஆகிய 6 பேரும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மகேஷ் தலைமறைவானார்.

இந்நிலையில் காதல் பிரச்சனை மோதலாக வெடித்து தனது குடும்பத்தார் சிறைக்கு சென்றதை அறிந்து மனவேதனையில் இருந்த சித்ராவை அவரது குடும்பத்தார் திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மனவேதனையில் சித்ரா வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டதில் பலத்த காயமடைந்து சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீஸார் சித்ராவை காதலித்த முத்துவை திங்களன்று கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.