டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மீனவ கிராமத்தின் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த நொச்சிக்குப்பம் மற்றும் சின்னமாங்கோடு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சின்னமாங்கோடு கிராமத்தின் மீது நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவ

News image
Updated On :7 ஜூன் 2014, 12:47 pm

பா.ஜான்பிரான்சிஸ்

கும்மிடிப்பூண்டி அடுத்த நொச்சிக்குப்பம் மற்றும் சின்னமாங்கோடு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சின்னமாங்கோடு கிராமத்தின் மீது நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமத்தினர் நடத்திய தாக்குதலில் சனிக்கிழமை மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த நொச்சிக்குப்பம் மற்றும் சின்னமாங்கோடு மீனவ கிராமங்களுக்கிடையே பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து சின்னமாங்கோடு கிராமத்தினர் நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தினரின் வலைகளை சேதப்படுத்தியதோடு 6 பேரை அடித்தும் காயப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நொச்சிக்குப்பம் கிராமத்தினர் கடந்த ஏப்ரல்-12ஆம் தேதி அருகில் உள்ள தமிழகம் மற்றும் ஆந்திர மீனவர்களின் துணையோடு சின்னமாங்கோடு மீனவ கிராமத்தை தாக்கி  பெட்ரோல் குண்டு வீசி வீடுகள் மற்றும் படகுகளை சேதப்படுத்தியதோடு பாதுகாப்பிற்காக இருந்த போலீஸôரின் வாகனங்களை சேதப்படுத்தி இரு போலீஸ் அதிகாரிகளை ஈட்டியால் குத்தி படுகாயப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து இது வரை 177 மீனவர்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து அவர்களை திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பிச்சை மகன் ராம்கி(25), சண்முகம் மகன் சின்னமணி(27), தேசப்பன் மகன் ராஜேஷ்(27) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இத்தோடு இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.