சென்னையிலிருந்து ஒரு ட்ரெயிலர் லாரி ஒன்று திருச்சியை நோக்கிச்சென்றது.செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே கட்டணம் செலுத்துவதற்கு நின்றுகொண்டு இருந்தது. அப்போது சென்னையிலிருந்து வந்த தனியார் பஸ் ஒன்று சாலையில் நின்றிருந்த ட்ரெயிலர் லாரி மீது மோதியது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரியதர்ஷினி(24), உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமணன்(41), கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில் மகன் கார்த்திக்(27) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.